நெய்வேலி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

நெய்வேலி, செப். 15:நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-29 என்எல்சி குடியிருப்பில் வசிப்பவர் வரதராஜன். இவரது மகள் பிரியங்கா(25). இவருக்கும், நெய்வேலி அடுத்த மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த வீரராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வீரராஜூக்கும், அவரது தந்தைக்கும் இடையே சம்பவத்தன்று இரவு குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியங்கா, இருவரையும்  தடுத்தும் அவர்கள் சண்டையிட்டுள்ளனர்.

இதனை அருகில் குடியிருந்த மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததால் மனமுடைந்த பிரியங்கா, தன் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து பிரியங்காவின் தந்தை வரதராஜன் ஊ.மங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Neyveli ,
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலை ஏற்க...