பட்டிவீரன்பட்டியில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை

பட்டிவீரன்பட்டி, செப். 11:  பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணமி மாதத்தில் திருவிளையாடலில் வரும் நிகழ்வான சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவரான சிவபெருளான் கையில் தங்க மண்வெட்டி, தங்க கூடையில் மண் சுமந்தபடி நகர்வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதமாக புட்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags : Pattiviranpatti ,
× RELATED மண்வளத்தை மேம்படுத்தும் நீலப்பச்சைப்பாசி!