கொளந்தானூர் பிரிவு அருகில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து

கரூர்,செப். 11: ஆபத்தான வளைவு பாதை கொண்ட கொளந்தானூர் பிரிவு அருகே வேகத்தடை அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் இருந்து பசுபதிபாளையம், புலியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் தெரசா கார்னர் வழியாக கொளந்தானூர் பகுதியை தாண்டிச் சென்று வருகின்றனர். கொளந்தானூர் மற்றும் ராமானூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் முடிவடைந்து முதலாமாண்டு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சாலையில் அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொளந்தானூர் பிரிவு அருகே மிகவும் ஆபத்தான வளைவுப் பாதை உள்ளது. இந்த பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக அடிக்கடி இரண்டு சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே விபத்தினை தடுக்கும் வகையில் கொளந்தானூர் பிரிவுச் சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொளந்தானூர் பிரிவு அருகே வேகத்தடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : vehicle accident ,Kollantanur ,
× RELATED கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்