விவசாயிகளுக்கு ஆலோசனை மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கும்பகோணம், செப். 11: கும்பகோணம் அருகே மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.கும்பகோணம் அடுத்த சுவாமிமலை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வருவதாக சுரங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுவாமிமலை அடுத்த அசூர் பைபாஸ் ரோட்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததுடன் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பன்னீர்செல்வம் மகன் ராஜ் (28) என்பவரை கைது செய்து சுவாமிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மேல்விசாரணைக்காக ஆர்டிஓவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Tags :
× RELATED விவசாயிகள் ஏமாற்றம்