பொன்னமராவதி பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகள் அப்புறப்படுத்த வலியுறுத்தல்

பொன்னமராவதி, செப்.10: பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றது. இந்த பேருந்துகளுக்கு இடையூராக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கூறி பேரூராட்சி மற்றும் காவல்துறையினரும் சமீபத்தில் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் கயிறு கட்டி பேருந்துகளை தவிர மற்ற வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் தவிர மற்ற வாகனங்கள் நிறுத்தாமல் இருப்பதால் பேருந்துகள் இடையூறு இன்றி வந்து செல்கின்றன.

இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மாடுகள், ஆடுகள், நாய்கள் என எல்லாவித கால்நடைகளும் இங்கு கூடி நிற்கின்றன. குறிப்பாக மாடுகள் அதிக அளவில் நிற்பதால் பேருந்துகள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் மாடுகளால் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூராக திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus station ,Ponnamaravathi ,
× RELATED மாடுகளுக்கு அணிவிக்கப்படும்...