திருவில்லி.நீதிமன்றம் தீர்ப்பு ஆக.25ல் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு

விருதுநகர், ஆக. 22: விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 25ம் தேதி, 2ம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி 5 மையங்களில் 14,587 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழு சார்பில், காலியாக உள்ள 8,826 இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற ஆக.25ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு, விருதுநகர் மாவட்டத்தில் 12,466 ஆண்கள், 2,120 பெண்கள், ஒரு திருநங்கை என 14,587 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில் வி.பி.முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் கல்வி நிறுவனம், விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, செவல்பட்டி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி என 5 மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்களை உரிய பரிசோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9 மணிக்கு மேல் வருவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்திற்குள் செல்போன், கடிகாரம், தேர்வு எழுத அட்டை உள்ளிட்ட எதுவும் எடுத்து செல்ல அனுமதியில்லை. தேர்வு எழுத பால்பாயிண்ட் (புளு அல்லது கருப்பு) பேனா மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு மையத்திலும் தேர்வர்கள் தேர்வு அறைக்கு எளிதில் செல்லும் வகையில் தேர்வு அறை, எண் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கும். தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என எஸ்பி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்