இளையான்குடியில் அரசு ஐடிஐ துவங்க வேண்டும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

இளையான்குடி, ஆக.22: சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அனந்த பாலன் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், அசோக்குமார், சேகர், கிருஷ்ணக்குமார் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ, ஜியோ போராட்டத்தில் கலந்து கொன்டவர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையை கை விட வேண்டும்.இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளையான்குடி பகுதி கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு ஐடிஐ(தொழிற் பயிற்சி மையம்) துவங்க வேண்டும். இளையான்குடியில் புதிய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்டட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை