ஜிஎஸ்டியால் மக்கள் சந்திக்கும் பிரச்னை நாடு முழுவதும் ஆன்லைனில் கருத்து கேட்கும் பணி துவக்கம்

கோவை,ஆக.22: இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.டி. யால் மக்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து நாடு முழுவதும்ஆன்லைனில் கருத்து கேட்கும் பணி நடைபெற்று வருகிறது .இதுபற்றி இந்நிறுவனத்தின் தென் மண்டல செயலாளர் ஆடிட்டர் ஜலபதி கூறியதாவது “மத்திய அரசு ஜி.எஸ்.டியை நடைமுறைபடுத்தியதில் இருந்து வியாபாரம்,தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும்,தொழில்துறை நலிவடைந்து விட்டது என்றும் தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் பொதுவாக பேப்பட்டு வருகிறது. எனவே ஜிஎஸ்டி யால்  மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை கண்டறிய எங்கள் நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஆன்லைனில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் இணையதளத்தில் சென்று பெயர்,இ-மெயில் ஐடி,செல் நம்பர் ஆகியவற்றைப் பதிவு செய்தால் அதில் 25 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.அதற்கு நீங்கள் பதிலளிக்கலாம். இதற்கு இம்மாதம் 31ம் தேதி கடைசி நாள். இந்தியா முழுவதும் சேகரிக்கப்படும் கருத்து கணிப்புகளை எங்கள் குழுவினர் ஆராய்ந்து ஜிஎஸ்டி வரியில் உள்ள பிரச்னைகளையும் அதனை தீர்ப்பதற்க்கு உண்டான ஆலோசனைகளைையும் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசின் நிதி அமைச்சகத்திற்கு வழங்குவோம். ஜி.எஸ்.டி அறிமுகபடுத்தியதில்–்் இருந்தே இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மூலம் ஜிஎஸ்டி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் .அரசு பள்ளியில் பிளஸ்2 பயிலும் மாணவ மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் படிப்பு குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைனில் இந்த கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இவ்வாறு ஜலபதி கூறினார்.

Tags :
× RELATED மொபைல் கடை உரிமையாளருக்கு பாட்டில் குத்து