ஊட்டியில் சாரல் மழை

ஊட்டி, ஆக. 22: ஊட்டியில் மாறுபட்ட காலநிலையால் மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் பெய்து வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆண்டு தோறும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இது போன்ற சமயங்களில் ஊட்டியில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்வது வழக்கம். இம்முறை ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் பெய்யாத நிலையில், மாறாக வெயிலின் தாக்கம் இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது.

ஆனால், கடந்த 3ம் தேதி துவங்கிய கனமழை 9ம் தேதிக்கு பின் ஓரளவு குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் இந்த சாரல் மழை தொடர்கிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எந்நேரமும்  வானம்  மேக மூட்டத்துடனும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்வதால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குளிர் வாட்டுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றும் பிற்பகலுக்கு மேல் சிறிது நேரம் மழை துளிகள் விழுந்தன. பின், மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது.

Tags :
× RELATED ட்டேரியில் கழிப்பிடம் கட்ட கோரிக்கை