திருச்செங்கோட்டில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, ஆக 22: நாமக்கல் மாவட்ட மதிமுக செயற்குழுக்கூட்டம், அவைத்தலைவர் வக்கீல் பழனிசாமி தலைமையில் திருச்செங்கோட்டில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் குருசாமி கலந்து கொண்டு பேசினார். கேரளா, கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மதிமுக பொது செயலாளர் வைகோ எம்பி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், சால்வை அணிவிப்பது, பட்டாசு வெடிப்பது போன்றவற்றை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கணேசன், சுப்ரமணியம், மாவட்ட நிர்வாகிகள் செல்லமுத்து, ராமசாமி, வேல்முருகன், நகர செயலாளர்கள் தனகோபால், சீனிவாசன், சிவம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேச்சுவார்தை நடத்தியும் பிரச்னை...