சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்,  ஆக.22: தமிழ அரசால், சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு தந்தை பெரியார்  விருது வழங்கப் படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல்  மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்,  சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, சமூக நீதிக்கான தந்தை  பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதினை  பெறுவோருக்கு 1 லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும்  வழங்கப்படும். நடப்பாண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை  பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே,  சமூக நீதிக்காக பாடுப்பட்டு, மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட  பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம்  மற்றும் முழு முகவரியுடன் வரும், அக்டோபர் 10ம் தேதிக்குள் விணப்பிக்க  வேண்டும். இவ்வாறு  கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய...