பச்சுடையாம்பட்டி ஊராட்சியில் புதிய நீர்தேக்கத்தொட்டி திறப்பு

சேந்தமங்கலம், ஆக.22: சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி ஊராட்சியில் புதிய தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியை சந்திரசேகரன் எம்எல்ஏ பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பச்சுடையாம்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 10 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத்தொட்டி பூங்காவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் சந்திரசேகரன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு நீர்தேக்கத்தொட்டியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்  புஷ்பராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரசேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பாஸ்கர், ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் விநியோகம்