கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி

ஓசூர், ஆக.22: ஓசூரில் பாஜ சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின் கோட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி, அமைப்புசாரா முன்னாள் மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதில் ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிாலளர்கள் பதிவு செய்து கொண்டனர். இதில், பாஜ கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரசாந்த், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிசோட்டா, சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கே.பூசாரிப்பட்டி அரசு...