×

கல்லடை ஊராட்சி மஞ்சம்பட்டியில் தடுப்பணை அமைக்கும் பணியை மத்திய நீர்மேலாண்மை குழு ஆய்வு

தோகைமலை,ஆக.22: தோகைமலை ஒன்றியத்தில் தடுப்பணை அமைக்கும் பணியை மத்திய குழுவினர் ஆய்வு செய்யதனர்.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் மழைநீரை சேமித்து நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக 100 நாள் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டுதல், பண்ணை குட்டைகள், பண்ணை வரப்புகள் அமைத்தல், ஏரி குளங்களை தூர்வாருதல் போன்ற பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த பணிகளை கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்காக மத்திய நீர்மேலாண்மை குழுவின் அதிகாரிகள் ராஜேஸ்சிங், ஜனா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் கல்லடை ஊராட்சி மஞ்சம்பட்டி ஆற்றுவாரியில் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்பணை மற்றும் நீர் தேக்க குழிகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்து உள்ளது என்று விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களைஅளவீடு செய்தனர். இதேபோல் பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர் மலைக்கோயில் கிரிவல சாலையில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும், பாதிரிபட்டி ஊராட்சி பாதிரிபட்டி குளத்தில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்றும் மரக்கன்று நடும் பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தோகைமலையில் அம்மா பூங்கா, கழுகூர் பெரிய ஏரி ஆகிய பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட திட்ட இயக்குநர் கவிதா, ஒன்றிய ஆனையர்கள் ராஜேந்திரன், ராணி, ஒன்றிய பொறியாளர் செல்வி, ஓவர்சியர் முருகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...