திருமயம் அருகே மக்கள் தொடர்பு முகாம் மக்கள் குறைகளை தொகுத்து மனுவாக வழங்கிய எம்எல்ஏ

திருமயம், ஆக.22: திருமயம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மக்களின் குறைகளை தொகுத்து மனுவாக எம்எல்ஏ ரகுபதி வழங்கினார்.திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 473 பயனாளிகளுக்கு ரூ.28.94 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திருமயம் எம்எல்ஏ ரகுபதி, தாசில்தார் சுரேஷ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருமயம் எம்எல்ஏ ரகுபதி பேசுகையில், நாங்கள் நடத்திய கிராமசபா கூட்டத்தில் மக்கள் தெரிவித்த குறைகளை தொகுத்து கணினியில் தட்டச்சு செய்து புத்தகமாக கொண்டு வந்துள்ளேன். இந்த குறைகளை நிவர்த்தி செய்தாலே மக்கள் தொடர்பு வெற்றி பெற்றதாக ஆகிவிடும் என்று பேசினார்.இதில் திருமண உதவி தொகை, முதிர்கன்னி, மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. இயற்கை மரண நிவாரணத் தொகை, கல்வி உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்று, விதவைச் சான்று மற்றும் துறை சார்பில் என மொத்தம் 473 பயனாளிகளுக்கு ரூ.28.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.


Tags :
× RELATED கீரனூரை சுற்றியுள்ள...