மின்னல் தாக்கி ஆடுகள் பலி

அறந்தாங்கி, ஆக.22: அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல அறந்தாங்கி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குரும்பூரை அடுத்த ஆண்டவராயர்சமுத்திரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த முத்தையா என்பவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 ஆடுகள் மின்னல் தாக்கியதால், கருகி உயிரிழந்தன. மேலும் 2 ஆடுகள் படுகாயமடைந்தது.Tags :
× RELATED கீரனூரை சுற்றியுள்ள...