×

அரசகுடும்பன்பட்டி, செங்கமலப்பட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுமாறு மனு

விருதுநகர், ஆக. 20: விருதுநகர் அருகே உள்ள கிராம மக்கள் மற்றும் சிவகாசி அருகே உள்ள கிராம மக்கள் குடிநீர் கேட்டு  கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டல்பட்டி, அரசகுடும்பன்பட்டி, மெட்டுக்குண்டு கிராமங்கள் உள்ளன. இவற்றில் அரசகுடும்பன்பட்டியில 300 குடும்பங்கள் உள்ளன. வாரம் ஒரு முறை குடும்பத்திற்கு 5 குடம் தண்ணீர் வருகிறது.கிராமத்தில் உள்ள 5 போர்வெல்களின் மோட்டாரும், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒரே ஒரு மோட்டாரில் பம்ப் செய்யப்படும் தண்ணீர் போதவில்லை. இதனால் 3 கி.மீ தூரம் சென்று தினசரி தண்ணீரை எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.

மெட்டுக்குண்டு கிராம மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் பிடிக்க விட மறுக்கின்றனர். அங்குள்ள அடிகுழாயில் தண்ணீரை அடித்து எடுத்து வரவேண்டிய சூழல் உள்ளது. அடிகுழாயில் வரும் தண்ணீரை குடித்தால் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கொடிய நோய்கள் வருகின்றன. கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கும் தண்ணீரில்லை. கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.15 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி ஊராட்சி முருகன் காலனி, சர்ச் தெரு, கோட்டமலை காலனிகளில் 7 நாட்களுக்கு ஒரு முறை உப்பு தண்ணீர் வருகிறது. ஒரு குடம் தண்ணீரை ரூ.6க்கும்,  குடிநீரை குடம் ரூ.15க்கும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. சர்ச் தெருவில் போர்வெல் போட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரவேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீரும், பிற உபயோகத்திற்கான தண்ணீரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சுழி அருகே வைக்கோல் படப்பில் தீ பிடித்தது