×

ராஜபாளையம் பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி கண்மாய்கள் அழிப்பு

ராஜபாளையம், ஆக. 20: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல கண்மாய்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில கண்மாய்களில் கட்டிட கழிவு மற்றும் குப்பைகளை கொட்டி அளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.ராஜபாளையம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உற்பத்தியாகும் மழைநீரை நம்பி பல கண்மாய்கள் இருந்து வருகின்றன. தற்போது தமிழக அரசு பெயரளவுக்கு சில கண்மாய்களை மட்டும் மராமத்து பணிகள் என கூறி விளம்பரம் தேடிக் கொண்டு வரும் நிலையில், பல கண்மாய்கள் நிலை படுமோசமாக நிலையில் உள்ளது. ஒருசில கண்மாய்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி சிறிது சிறிதாக கண்மாய்களை மூடும் அளவிற்கு இருந்து வருகிறது. இதை தடுப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பெயரளவுக்கு ஒருசில கண்மாயில் மட்டும் குடிமராமத்து பணி என பல லட்சங்கள் ஒதுக்கி பணிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயத்தை நம்பியுள்ள கண்மாய்களை காப்பாற்றி வந்தாலே போதும். அதற்கான எந்த ஒரு பணிகளையும் அரசு செய்யாமல் இருப்பதால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பல விவசாயிகள் மனமுடைந்து விவசாய பணிகளை மேற்கொள்வதில்லை. இதனால் விளைநிலங்களை கிடப்பில் போடுவதால் கால்நடைகளுக்கு கூட தீவனம் இல்லாமல் போய்விடுகின்றன. இதே நிலை நீடித்து வந்தால் உணவு பொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை விரைவில் வரும். எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து கண்மாய்களையும் பாதுகாத்து விவசாய பணிகளை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென பல விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை