×

காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்

காரியாபட்டி, ஆக. 20: காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம் துவக்கப்பட்டது. விருதுநகர்  மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்று நட  திட்டமிடப்பட்டது. இதன்படி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முன்னிலை வகித்து  மரக்கன்று நட்டி துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் கென்னடி  தலைமை வகித்தார். இதில் இளநிலை உதவியாளர் தங்கமணி, வரித்தண்டலர் பலராமன்,  கணினி ஆப்ரேட்டர் பெருமாள் மற்றும் சுகாதார பணியாளர்கள், துப்பரவு  தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கண்மாய், ஊரணி மற்றும் சாலையோரங்களில்  மரக்கன்றுகள் நடப்பட்டன. வீடுகள் தோறும் மரக்கன்று வழங்கப்படும். நடவு  செய்யப்பட்ட மரங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாநில  பேரிடர் நிவாரண நிதி திட்டம் மூலம் தரைமட்ட நீர்தேக்க தொட்டி செவல்பட்டி  மற்றும் கரிசல்குளம் கண்மாய் பகுதியில் அமைக்கப்படும் என செயல் அலுவலர்  மோகன் கென்னடி தெரிவித்தார்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு