நந்தினி கையெழுத்து இயக்கம்

சிவகங்கை, ஆக.20:  சிவகங்கையில் மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி முன் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி வழக்கறிஞர் நந்தினி துண்டுப்பிரசுரம் வழங்கி, கையெழுத்து இயக்கம் நடத்தினார். இயற்கை வழி மனிதநேய இயக்கம் சார்பில் நேற்று காலை கல்லூரி முன் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் போதையை கொடுத்து மக்களை படுகொலை செய்யும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிடக்கோரி கல்லூரி முன் துண்டுப்பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். பின்னர் கல்லூரி மாணவிகளிடம் கையெழுத்து பெற்றனர். சுமார் ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்து பின்னர் புறப்பட்டு சென்றனர்.

Tags :
× RELATED காரைக்குடியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு...