புதுகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஆக.20: புதுகையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 526 மனுக்கள் குவிந்தன.புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு கல்வி உதவித்தொகை விலையில்லா வீட்டு மனைபட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 526 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3...