×

காந்தி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கரூர்,ஆக.20: காந்தி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் கரூர் நகராட்சிககுட்பட்ட காந்திகிராமம் பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு முதல் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இதில் சுப்ரமணியபுரம் (இந்திரா நகர்) வரை ஏராளமான குடும்பத்தினர் வசிதது வரும் நிலையில், இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த சாலையின் வழியாக செல்கிறது. மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதோடு, போதிய தெரு விளக்கு வசதியும் இல்லை. எனவே இந்த வசதிகளை செய்து தர வேண்டும்.

மேலும் இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் உள்ளது. எனவே, இந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், விவசாய நிலங்கள் மற்றும் இடங்களில் அனுமதியின்றி செங்கல் மண் எடுப்பதையும் தடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.ராஜ வாய்க்கால் மாயம்: மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் வழங்கிய மனுவில்,அமராவதி நதியின் கிளை வாய்க்காலான 5 கிமீ மீட்டர் நீளமும், 42 அடி அகலமும் கொண்ட தாந்தோணிமலை ராஜவாய்க்காலை காணவில்லை. எனவே பாசன வாய்க்காலை கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் மாவட்டம் புலியூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. அருகில் மருத்துவமனை போன்ற பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் இதன் வழியாக செல்கின்றனர். எனவே இதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.



Tags :
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்