×

அண்ணா பிறந்த நாளில் மதுக்கூடங்களை நூலகமாக மாற்றுங்கள்

பொன்னேரி, ஆக. 20: தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை மூடுவதை கைவிட்டு, மதுக்கூடங்களை மூடி நூலகங்கள் அமைக்க வேண்டும் என  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காந்தி பேரவை சார்பில், பூரண மதுவிலக்கு குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் கலந்துகொண்டு பேசியதாவது: “அத்திவரதரை தரிசிப்பதை காட்டிலும், மதுகுடிப்பவரை தடுப்பது சால சிறந்தது. என்னிடம் ஒரு மணி நேரம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வந்துவிடுவேன். இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால்தான் காந்தியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடவேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடும் திட்டத்தை கைவிட்டு மதுக்கூடங்களை மூடி நூலகமாக மாற்ற வேண்டும்.”இவ்வாறு குமரிஅனந்தன் பேசினார்.இந்த இக்கூட்டத்தில் ஜெயக்குமார் எம்பி, மாநில துணைத் தலைவர் வி.ஆர்.பகவான், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...