பூமாயி அம்மனுக்கு பால்குடம் விழா

திருப்புத்தூர், ஆக.14:  திருப்புத்தூர் பூமாயிஅம்மனுக்கு ஆடி செவ்வாயை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். திருப்புத்தூரில் நேற்று காலையில் தென்மாப்பட்டு அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பூமாயி அம்மன் கோயிலை வந்தடைந்னர். பின்னர் அம்மனுக்கு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்து வந்த பாலால் சிறப்புஅபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. சர்வ அலங்காரத்தில் பூமாயி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று காலை தென்மாப்பட்டு சவுக்கை திடலிலிருந்து முளைப்பாரி எடுத்து பக்தர்கள் அம்மனை வழிபடுகின்றனர். தொடர்ந்து அக்கசாலை விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது.

Tags :
× RELATED நெல்கொள்முதல் நிலையம் வருமா?