எஸ்.வி.மங்கலம் அம்மன் கோயிலில் ஆடிப்பொங்கல் விழா

சிங்கம்புணரி, ஆக.14:  சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் மற்றும் அ.காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள் ஆடு, கோழிகளை வெட்டி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சிங்கம்புணரி அருகே காளாப்பூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாயன்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.  விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல் எஸ்வி .மங்கலம் அழகு நாச்சியம்மன் கோயிலிலும் பொங்கல் விழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் எஸ்.வி.மங்கலம், அ.காளாப்பூர், சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை