நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கடைகளில் தேசிய கொடி விற்பனை அமோகம்

நாமக்கல், ஆக.14: நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல்லில் தேசிய கொடி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கொடியினை வாங்கிச் செல்கின்றனர். நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல்லில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது.  சுதந்திர தினத்தன்று பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழச்சிகள் நடைபெற உள்ளது. அதே போல் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அதே போல் சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல்லில், தேசிய கொடி விற்பனை, கடந்த 2 நாட்களாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் கடைவீதி மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் தேசிய கொடியின் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். சென்னை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு நாமக்கல்லுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. சட்டையில் அணிந்து கொள்ளும் காகித கொடி ₹1க்கும், துணிக் கொடிகள் ₹25 முதல் 230 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் விற்கப்பட்ட விலையே இந்த ஆண்டும் உள்ளது எனவும், விலை உயரவில்லை என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED கடன் பிரச்னையால் வெள்ளிப்பட்டறை அதிபர் தீக்குளித்து தற்கொலை