கரூர் கருப்பம்பாளையத்தில் போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் மக்கள் அவதி

கரூர், ஆக. 14: கரூர் அருகே கருப்பம்பாளையத்தில் போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.கரூர் அருகே உள்ள கருப்பம்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் அதிகளவில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான அளவில் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சாலையோரம் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. உடனடியாக அவற்றை அள்ளுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கருப்பம்பாளையத்தில் போதுமான குப்பை தொட்டிகைளை வைத்து தினமும் குப்பைகளை அள்ள உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கரூரில்கிடப்பில் உள்ள சுற்றுவட்டசாலை திட்டம் செயல்படுத்தப்படுமா