பெண்ணை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது

விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி சிவகனி (30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி சிந்துஜா (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகனி அப்பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சிந்துஜா, சிண்டிகேட் மகள் சிம்ரன் (21), மகன் அரிஹரன் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவகனியை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகனி கொடுத்த புகாரின் பேரில் சிந்துஜா, சிம்ரன், அரிஹரன் ஆகிய 3 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags :
× RELATED தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா