×

எல்லாபுரம் ஒன்றியத்தில் முதல்வர் துவக்கி வைத்த குடிமராமத்து பணிகள் சுறுசுறுப்பாகுமா?

ஊத்துக்கோட்டை, ஆக. 11: தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-2020ம் நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க ஆரணியாறு வடிநில கோட்டத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 10 ஏரிகளும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 9 ஏரிகளும், பொன்னேரி வட்டத்தில் 11 ஏரிகளும் என 30 ஏரிகளை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணிகள், ஏரி கலங்கள் மற்றும் மதகுகள் சீரமைத்தல் பணிகள், வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு  ₹10.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், இதற்கான பணிகளை கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே 204 ஏக்கர் பரப்பளவுள்ள பனப்பாக்கம் ஏரியை ₹29 லட்சத்திலும், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை ஊராட்சி  கூரம்பாக்கம் சிறு பாசன ஏரியை ₹8.86 லட்சத்திலும் தூர்வாரும் குடிமராமத்து பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார்.

ஆனால் அதற்காக பணிகள் இன்னும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில், மஞ்சங்காரணை ஊராட்சி கூரப்பாக்கம் சிறு பாசன ஏரியை தூர்வாரும் குடிமராமத்து பணிகளை முதல்வர் கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார். ஆனால் அந்த பணிகளை துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ”மழை வருவதற்குள் குடிமராமத்து பணியை முடித்தால் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். எனவே, குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...