×

குன்றக்குடி சாலை பளிச் பஸ்-கார் நேருக்குநேர் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி


காரைக்குடி, ஜூலை 24: காரைக்குடி அருகே பஸ், கார் மோதியதில் ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார்.காரைக்குடி வள்ளுவர் தெரு ரோஜா வீதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் (54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முள்ளங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியை காரில் சென்று பள்ளியில் இறக்கிவிட்டு காரைக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது காரைக்குடியில் இருந்து புதுவயல் நோக்கி வந்த டவுன்பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதின. இதில் பலத்த காயமடைந்த சித்தார்த்தன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் தேவகி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.இன்றைய பலன்கள் பொதுப்பலன்: ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, பயணங்கள் தொடங்க, அதிகாரிகளை சந்திக்க, வாஸ்து சாந்தி செய்ய, அழகு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு