×

அரசு பள்ளியில் முப்பெரும் விழா



காளையார்கோவில், ஜூலை 24: காளையார் கோவில் அருகில் கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம், பழைய மாணவர்கள் அமைப்பு, மரம் நடும் விழா ஆகிய முப்பெருவிழா நடைபெற்றது விழாவிற்கு தலைமை ஆசிரியை தெய்வாணை தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். ஆங்கிலபட்டதாரி ஆசிரியர் ராஜபாண்டி மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினார். கணித பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி தண்ணீர் தேவைகள் மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்தும், அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த செய்திகளை இடைநிலை ஆசிரியர் அமல தீபா விளக்கிக் கூறினார்.  மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களுடன் பழைய மாணவர்கள் இணைந்து 30க்கும் மேற்பட்ட அழகுத் தாவரங்களையும் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் பள்ளிக்கு வழங்கினார்கள். அவற்றைப் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரிய ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பழைய மாணவர்கள் இணைந்து நட்டனர். பின்பு பள்ளி வளாகத்தை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, டெங்குபோன்ற வைரஸ் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியரி ஜோசப் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு