×

திமுக செயற்குழு கூட்டம்

சிவகங்கை, ஜூலை 24: சிவகங்கையில் திமுக தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், அவைத்தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வேலூர் மக்களவை தேர்தலில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய தேர்தல் பணியாற்றுவது.

சிவகங்கை மாவட்ட குடிமராமத்து பணியில் அரசியல் தலையீடு இல்லாமல் ஆயக்கட்டுகாரர்களை சேர்த்து குழு அமைத்து சங்க தேர்தல் நடத்தி அதன் மூலம் பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிங்கமுத்து, சவுந்திரராஜன், ஊராட்சி கழக செயலாளர்கள் பொன்னம்பலம், லட்சுமணன், முத்தரசன், மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை