×

மன்னார்க்காடு அருகே காஞ்ஞிரப்புழா அணை பூங்கா திறப்பு

பாலக்காடு, ஜூலை 24: பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே புதுப்பிக்கப்பட்ட காஞ்ஞிரப்புழா அணை பூங்காவை சுற்றுலாத்துறை மற்றும் தேவஸ்தானத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குத்துவிளக்கேற்றி நேற்று திறந்து வைத்தார். கோங்காடு எம்.எல்.ஏ., விஜயதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வக்கீல் சாந்தகுமாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். மன்னார்க்காடு பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் ஷெரிப், காஞ்ஞிரப்புழா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் விழாவில் பங்கேற்று பேசினர். விழாவில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது:  பாலக்காடு மாவட்டம் அதிகளவு சுற்றுலாத்தலங்களை கொண்டுள்ளது. இவற்றை விரிவுப்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் விதம் அணைபூங்காக்கள் நவீனப்படுத்தி வருகின்றது  இந்த பூங்காவை தற்போது ரூ.2 கோடியே 97 லட்சத்து 84 ஆயிரத்து 814 செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., விஜயதாஸின் நிதியுதவியிலிருந்து படகுசவாரிக்கு ஓரு படகும், சுற்றுலத்துறை சார்பில் 4 படகுகளும் சுற்றுலப்பயணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளது.காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு தலா ரூ.20ம், சிறுவர்களுக்கு தலா ரூ.10ம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும். நடைப்பாதைகள், முதியவர்கள் ஓய்வு அறை, குழந்தையினருக்கு பாலூட்டும் மகளிர் அறை, சிற்றுண்டி, கழிப்பிட அறைகள், சைக்கிள் சவாரி, படகு சவாரி ஆகியவை நவீனவசதிகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளம், ரெயின் ஷெல்ட்டர் ஆகியவை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்ஞிரப்புழாவில், வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி படகு போட்டி நடைபெறும் என ெதரிவித்தார்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு