மாந்தாளி கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்டம்

காளையார்கோவில், ஜூலை 23: காளையார்கோவில் ஊராட்சி மாந்தாளி கிராமத்தில் கால்நடை மருந்தகம் சார்பில் பாதுகாப்பு திட்டஅமுகாம் நடைபெற்றது. மேலும் வெள்ளாடு, செம்மரி ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் சினை ஊசி, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலடு நீக்கம், போன்ற பொது சிகிச்சை அளிக்கபட்டது. தொடர்ந்து கால்நடைகளுக்கான தீவனப் பயிர்கள். சோளம், தட்டப்பயிறு, கோ4, புல் கரணைகள், குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கறவை மாடுகளுக்கு பரவக் கூடிய மடிவீக்கத்தைப் பற்றியும் கோழிகளுக்குப் பரவும் வெள்ளைக் கழிச்சல் நோய் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் விஜயகுமார், ஆவின் மருத்துவர் லோகேஸ், கால்நடை ஆய்வாளர் ரோஸ்லின் செல்வம், பராமரிப்பு உதவியாளர் மனுவேல், ஆவின் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சிவகங்கை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் முருகேசன் மற்றும் உதவி இயக்குநர் சேகர் ஆகியோர் சிறந்த கிடேரி கன்றுகளுக்குப் பரிசும், பயனாளிகளுக்கு தாது உப்பும் வழங்கினர். இதில் 150 மாடுகளும், 300க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

Tags :
× RELATED சிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்