×

மதுரையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பஸ்போர்ட் அறிவிப்பு இல்லாதது தென் தமிழக மக்களுக்கு ஏமாற்றம்

மதுரை, ஜூலை 23: மதுரையில் பஸ்ேபார்ட் குறித்த அறிவிப்பு வெளிவராதது, தென்தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் ெஜகதீசன், செயலாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் கோவை, சேலம் மற்றும் மதுரையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பஸ்போர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் வருவாய்த்துறை அமைச்சரும் மதுரையில் பஸ்போர்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கோவை மற்றும் சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், சேலத்தில் ரூ.1600 கோடியில் பஸ்போர்ட் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் மதுரை பஸ்போர்ட் பற்றி அறிவிப்பு இல்லை. இது தென்தமிழக மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல தொழில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தென் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது.மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கப்படாமல் இருப்பது, இரு வழி விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமான நிலையம் இதுவரை சேர்க்கப்படாதது, தற்ேபாது மதுரை பஸ்போர்ட் திட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடாதது போன்ற நிகழ்வுகள், தென்தமிழகத்தை மத்திய மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசுகளின் இந்த புறக்கணிப்பு தென்தமிழக மக்களுக்கும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கும் பெரும் எமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது. எனவே தமிழகத்தின் 3 வது பெரிய நகரமான மதுரையில் பஸ்போர்ட் அமைய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்