கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பேட்டரி பொருத்திய டூவீலர்கள் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை, ஜூலை 19: பெட்ரோல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் பேட்டரியில் இயக்கும் இரு சக்கர வாகனம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டுன் வாகனங்களை இயக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தினமும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் இன்னும் சில மாதங்களில் ரூ.100 எட்டிவிடும் என்று அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் சரக்கு கட்டணங்களை விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிகியுள்ளது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை வாக்க முனைப்பு காட்டி வருகின்றனர். 8 மணிநேரம் தொடர்ந்து சார்ஜ் செய்தால் 70 கி.மீ முதல் 80 கி.மீ வரை செல்லும் வகையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரு நகரங்களில் பேட்டரியில் இயக்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு விலை உயர்ந்த பெட்ரோல் தேவையில்லை. மேலும் மின்சாரமும் அதிகமாக தேவைப்படுவதில்லை. 8 மணி நேரம் சார்ஜ் செய்ய ஒரு யூனிட் மின்சாரம் போதுமானது என்பதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குடும்ப பெண்கள், தினமும் அலுவலகத்திற்கு சென்று மாலை வீடுதிரும்புவோர் இந்த பேட்டரியில் இயங்கும் டூவீலர்களை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் இந்த வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் பெட்ரோல் விலை உயர உயர பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் குறித்த பயிற்சி