×

ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் கோளரங்க மாதிரியை கண்டுகளித்த மாணவிகள்

புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்க மாதிரியை மாணவிகள் கண்டு களித்தனர்.புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சித்தனவாசலில் புதியதாக தொடங்கப்பட்டு உள்ள கோளங்கரத்தின் மாதிரியை மாணவிகள் பார்வையிடும் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.இதற்காக பள்ளி வளாகத்தில் மாதிரி கோளரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) திருச்செல்வம் தலைமை தாங்கினார்.இதில் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு மாதிரி கோளரங்கத்தை கண்டு ரசித்தனர்.இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரெங்கராஜூ, ஒருங்கிணைப்பாளர் மதியழகன், உடற்கல்வி இயக்குனர் ராஜாசரோஜா, அறிவியல் கோளரங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரவு படுக்கபோகும்போது தீவனம் போடனும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இரவு படுக்க போகும்முன் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஏதாவது தீவனம் போட்டுவிட்டு வந்தால்தான் எங்களுக்கு தூக்கமே வரும். ஆனால் இந்த ஆண்டு அதுபோல் செய்ய முடியாத அளவிற்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு உரக்கமில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ