×

இளம் கோழிகளில் முட்டை உற்பத்தி குறையும்

நாமக்கல், ஜூலை 18:  நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில், இளம் கோழிகளில் முட்டை உற்பத்தி குறையும் என, வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், வரும் 3 நாட்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். 8 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று மேற்கு திசையில் இருந்து 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 96.8 டிகிரியும், குறைந்தபட்சமாக 77 டிகிரியும் இருக்கும். தற்போது நிலவும் வெப்பநிலை கோழிகளுக்கு சாதகமானதாக இருக்கும். பருவ மழைக்காலம் என்பதால், அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரிக்கும். மக்காச்சோளம் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக, அதன் கொள்முதல் குறைந்துள்ளது. மக்காச்சோளத்தின் தரமும், தீவனம் தயாரிப்புக்கு ஏற்றதாக இல்லை.
எனவே, மக்காச்சோளத்தின் தரத்தில் மிகுந்த கவனம் கொண்டு, பண்ணையாளர்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இளம் கோழிகளில் முட்டை உற்பத்தி குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே, தீவனத்தில் பூஞ்சான நச்சு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இவ்வாறு வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்