×

அஞ்சலக உதவித்தொகை விண்ணப்பிக்க அைழப்பு

ஊட்டி, ஜூலை 18:  நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறியிருப்பதாவது:அஞ்சல் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க இந்திய அஞ்சல் துறை தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற அஞ்சல் தலை சேகரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மாணவர்கள் இடையே அஞ்சல் தலை மீதான நாட்டத்தை மற்றும் ஆராய்ச்சியை பொழுதுபோக்காக மாற்றுவது இதன் நோக்கமாகும். இத்திட்டத்தில் அஞ்சலக வட்ட அலுவலகங்கள் நடத்தும் அஞ்சல் தலை சேகரிப்பு சம்பந்தமான வினாடி வினா மற்றும் செயல்முறை திட்டம் மூலம் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் கல்வியில் சிறந்து விளங்கும் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பை பொழுதுபோக்காக வைத்துள்ள மாணவர்களுக்கு உதவித்ெதாகை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயிலும் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு மன்றம் இருத்தல் வேண்டும். மேலும் அந்த மன்றத்தில் மாணவர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். சேகரிப்பு மன்றம் இல்லாதபட்சத்தில் மாணவர்கள் தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேகரிப்பு டெபாசிட் கணக்கு வைத்திருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கடைசியாக நடைபெற்ற பள்ளி தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தற்போதைய நிகழ்வுகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், புவியியல் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான 50 வினாக்கள் கேட்கப்படும். உதவித்தொகை தேர்ச்சி பெற்ற மாணவர் மற்றும் அவரது பெற்றோரின் பெயரில் உள்ள இந்தியா பேமண்ட் பேங்க் அல்லது அஞ்சலக சிறுசேமிப்பு வங்கியின் கூட்டு கணக்கில் வரவு வைக்கப்படும். விண்ணப்ப படிவம் www.tamilnadupost.nic.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள அஞ்சலகத்தில் பெறலாம். விண்ணப்பத்தை வரும் 26க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தி போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல், வெஸ்டர்ன் ரீஜன், கோவை 641002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.


Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு