×

முதுமலை வன எல்லையில் அகழி பராமரிப்பு பணி

கூடலூர் ஜூலை 18:கூடலூரை அடுத்த தொரப்பள்ளி குனில்வயல் பகுதியில் கடந்த 7ம் பால் சேகரிக்கும் ஜீப்பை காட்டு யானை தந்தத்தால் குத்தி புரட்டியது. இதில் ஜீப்பில் இருந்த இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் அனைத்து தரப்பினர் அடங்கிய குழு பேச்சுநடைபெற்றது.தொரப்பள்ளி மற்றும் அதனை ஒட்டியுள்ள குனில் வயல், ஏச்சம் வயல், வட வயல், புத்தூர் வயல், அல்லுர் வயல், குன்னுமேடு, மொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் தென்னை, வாழை, பாக்கு, நெல், இஞ்சி, மரவள்ளி போன்றவை காட்டு யானைகளால் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருவதாலும், அதற்கான உரிய இழப்பீடு கிடைக்காததாலும் விவசாயிகள் மற்றும் விவசாய பயிர்களை பாதுகாக்க யானைகள் வனப்பகுதியில் இருந்து வராமல் தடுக்க அகழிகளை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் அதனை ஒட்டி மின்வேலி அமைத்தும் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்து.இதனை அடுத்து வரும் 15 நாட்களுக்குள் பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், யானைகள் நடமாட்டத்தை கவனித்து அவற்றை விரட்டும் வகையில் வனத்துறை சார்பில் 24 மணி நேர ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உறுதி அளித்தனர்.  

இதன் அடிப்படையில் சேதமடைந்த அகழி பகுதியில் வனத்துறையினர் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு காட்டு யானைகள் சாலை வழியாக ஊருக்குள் வருவதை கண்காணித்து விரட்டும் பணியும் நடைபெற்று வருகின்றது.இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக தொரப்பள்ளி முதல் வரை நெல்லிக்கரை உள்ள இரண்டு கிலோ மீட்டர் தூர அகழியில் சேதமடைந்து யானைகள் உள்ளே வரும் பகுதிகளை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணி நேற்று துவங்கியது. இப்பணியினை பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags :
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை