மணல் கடத்திய 2 பேர் கைது

திருப்புத்தூர், ஜூலை 18: திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் பகுதியில் லாரியில் மணல் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் மாவத்தூர் பள்ளதெருவை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சிவசக்தி(30). இவர் அறந்தாங்கியில் இருந்து லாரியில் மணல் ஏற்றி தளக்காவூர் வழியாக கல்லல் ரோட்டில் வந்துள்ளார். அப்போது கீரணிப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நாச்சியாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ., ஈஸ்வரன் லாரியை நிறுத்தி விசாரித்துள்ளார். டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து விசாரித்த போது, அனுமதியில்லாமல் மணல் கடத்தியதும், லாரியில் போலியான நம்பர் எழுதப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாரியின் டிரைவர் சிவசக்தி மற்றும் லாரியின் உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்