×

திருப்புத்தூரில் இன்று மின்தடை

திருப்புத்தூர், ஜூலை 18: திருப்புத்தூரில் இன்று 5 மணிநேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருப்புத்தூர் நகரில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற இருப்பதால் மதுரை ரோடு, அஞ்சலகவீதி, பழைய பேருந்து நிலையம், மஞ்சுளா தியேட்டர் பகுதி, பூமாயி அம்மன் கோயில் பகுதி மற்றும் தென்மாப்பட்டு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...