×

அமெரிக்காவில் இறந்த பெண் குறித்து ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., தனித்தனியாக விசாரணை

திண்டுக்கல், ஜூலை 18: கூடுதல் வரதட்சணைக்கேட்டு அமெரிக்காவில் வசித்த தனது மகளை மாப்பிள்ளை விட்டார் கொலை செய்து விட்டதாக பெண்ணின் தாய் கொடுத்த புகார் குறித்து ஆர்.டி.ஓ., உஷா, டி.எஸ்.பி., வினோ ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவடடம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மனோபிரியா (53). இவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெடர் தெய்வத்திடம் கடந்த ஜூலை 13ம் தேதி ஒரு புகார் அளித்தார். இதில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த சிவசங்கரன் (31) அமெரிக்காவில சாப்ட்வேர் இனஜினியராக .உள்ளார். இவருக்கு எனது மகள் மனோபிரியாவுக்கும் கடந்த 2017 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் பணம் கொடுத்தோம். இருவரும் அமெரிக்கா சென்று குடும்பம் நடத்தினர்.இந்நிலையில் எனது மருமகன் சிவசங்கரன் மற்றொரு கம்பனியில் கூடுதல் சம்பளத்திற்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து நான் கூடுதலாக சம்பளம் வாங்குகிறேன். இதனால் கூடுதலாக ரூ.100 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் வரதட்சணையாக தர வேண்டும் என மனைவியிடம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் மன வேதனையடைந்து எனது மகள் என்னிடம் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் ஜூலை 2ம் தேதி எனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக, சிவசங்கரன் என்னிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஜூலை 13ம் தேதிதான் எனது மகளின் உடலை இங்கு கொண்டு வந்தனர். எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

தேனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை: திண்டுக்கல் என்.எஸ்.நகர் கணவன் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட மனோபிரியாவின் உடல், அமெரிக்காவில் 11 நாட்கள் பிரேத அறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு வசதிகள் இல்லாததால், தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 4 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த அறிக்கை திண்டுக்கல் போலீசாருக்கு விரைவில் வர உள்ளது.ஆர்.டி.ஓ., விசாரணை: மனோபிரியா, சிவசங்கரன் தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இதனால் பெண்ணின் இறப்பு குறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ., உஷா விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, தேனி மருத்துவக் கல்லுாரியில் செய்யப்பட்ட பிரதே பரிசோதனை அறிக்கை, சிவசங்கரன் தாய், தந்தையர், உறவினர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

டி.எஸ்.பி., விசாரணை: அதே நேரத்தில் திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி.,வினோவும் தனது பங்கிற்கான விசாரணையை துவக்க உள்ளார். இதில் அங்கு நடந்த சம்பவம் குறித்து தனித்தனியாக விசாரிக்கவும், மொபைல் போன் உரையாடல்களையும் கேட்கவும். அதில் உள்ள கருத்துக்களை திரட்டவும் உள்ளார்.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தெய்வம் கூறியதாவது: அமெரிக்காவில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது. பெண்ணிற்கு வரதட்சணை கொடுமையா, அடித்து கொலை செய்தார்களா என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், விசாரணை முடிவில்தான் நாங்கள் கூற முடியும். தற்போது ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணை அறிக்கை எஸ்.பி.,யிடம் அளிக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்