×

சணப்பிரட்டி செல்லாண்டியம்மன் கோயில் தேர் திருவிழா

கரூர், ஜூலை 18: கரூர் சணப்பிரட்டியில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் விழாவினை முன்னிட்டு நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி செல்லாண்டியம்மன் கோயில் விழாவினை முன்னிட்டு கடந்த 12ம்தேதி அன்று அன்னதானத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து, அம்மை அழைத்தல், குதிரை குலுக்கல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 17ம்தேதியான நேற்று அம்மன் ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேர் புறப்படுதல் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது. சணப்பிரட்டி பகுதியில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சணப்பிரட்டி, தொழிற்பேட்டை வழியாக பசுபபாளையம் வந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கிடா வெட்டி, பூஜைகள் செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அம்மனை வழிபட்டதால் பசுதிபாளையம் பகுதியை திருத்தேர் நிகழ்வால் பரபரப்புடன் காணப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்