ஊரக வளர்ச்சி துறையினர் தத்தெடுப்பு கீழச்சக்கர கோட்டை குளம் தூர்வாரும் பணி துவக்கம்

கடவூர், ஜூலை18: தென்னிலை ஊராட்சி கீழச்சக்கர கோட்டை குளத்தை ஊரக வளர்ச்சி துறையினர் தத்தெடுத்து தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.கடவூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சார்பில் நீர் மேலாண்மைக்காக குளம் தூர்வாரும் பணி நடந்தது. அரசு குளங்கள் தூர்வாரி குடிமராமத்து பணி தொடங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் 258 வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரூர் மாவட்டமும் ஒன்றாகும். இதற்காக குளங்களை தூர்வாரும் பணி கரூர் மாவட்டத்தில் மற்றத் துறை அதிகாரிகள் தொடங்குவதற்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அந்தந்த ஒன்றியங்களில் குளத்தை தத்தெடுத்து தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடவூர் ஒன்றியம் தென்னிலை ஊராட்சி கீழச்சக்கரக்கோட்டையில் உள்ள குளத்தை தத்தெடுத்து நீர் மேலாண்மையைப் பெருக்க குளத்தை தூர்வாரினர். நிகழ்ச்சிக்கு பிடிஓ கனகராஜ் தலைமை வகித்தார். ஏபிடிஓ. பரமேஸ்வரன் ஒன்றியப் பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட உதவி இயக்குநர் உமா சங்கர் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்று குளத்தை தூர்வாரினார்கள்.

Tags :
× RELATED அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு...