×

காந்திப்பேட்டை பகுதியில் பூத்துள்ள காகித பூ

ஊட்டி, ஜூலை 16: காந்திப்பேட்டை பகுதியில் மஞ்சள் நிறத்தில் பூத்துள்ள காகித பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
  நீலகிரி மாவட்டத்தில் பல வகையான செடிகள் காணப்படுகிறது. இவைகளில் காகித பூ என்று அழைக்கப்படும் ஹெலி கிரைசம் வகையை சேர்ந்த மலரும் ஒன்று. இந்த மலர் காடுகளில் வளரக்கூடியவை. இந்த மலர்கள் பல மாதங்களாக வாடாமல் இருக்கும். இதன் இதழ்களை தொட்டால் காகிதம் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் இதை காகித பூ என மக்கள் அழைக்கின்றனர். இந்த மலர்கள் காடுகளில் அதிகளவு கிடைப்பதால், இதை பறித்து வந்து தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உட்பட சுற்றுலா தலங்களில் சாலையோரங்களில் சிலர் வைத்து விற்பனை செய்கின்றனர்.  

ஒரு மலர் கொத்து ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கின்றனர். இதை சுற்றுலா பயணிகளும் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.  தற்போது, ஊட்டி அருகேயுள்ள காந்திப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பதுடன். அதன் நடுவே சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைகின்றனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ