×

வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோற்சவம் கருட வாகனத்தில் பெருமாள் உலா இன்று தேரோட்டம்

சாத்தூர், ஜூலை 16: சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழாவையொட்டி  பெரிய கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார். சாத்தூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் பெருமாள் பல்லக்கு சேவை, பெரிய கருட வாகனம், சிறிய கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எட்டாம்நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட பெருமாள், பெரிய கருட வாகனத்தில் எழுந்தருளினார். அருகில் உள்ள சடையம்பட்டி கிராமம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட ரத வீதிகளின் வழியாக வீதி உலா வந்து கோவில் சென்றடைந்தார். விழாவில் சாத்தூர் மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், கோயில் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம்  இன்று நடைபெற உள்ளது. விழா மொத்தம் 12 நாட்கள் நடக்கிறது.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை