×

திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்? அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

திருப்புவனம், ஜூலை 16:  திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து இயங்கி வருகிறது. திருப்பாச்சேத்தி மற்றும் சத்திரக்குடி அருகே போகலூர் ஆகிய இரு இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனக் கட்டணம் வசூலிக்கும் பணி கடந்த 13ம் தேதி துவங்கியது. திருப்பாச்சேத்தி டோல் கேட்டில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நிறுவனம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசிதழில் எந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம், மாதாந்திரக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார், ஜீப் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.50ம் 24 மணி நேரத்திற்கு ரூ.75ம்  மாதாந்திர கட்டணம் ரூ.1700ம், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.25ம் வசூலிக்க வேண்டும். மினி பஸ் மற்றும் வணிக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.80ம் 24 மணி நேரத்திற்கு ரூ.125ம் மாதாந்திர கட்டணம் ரூ.2750ம், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.40ம், பஸ் அல்லது டிரக் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.175ம் 24 மணி நேர கட்டணம் ரூ.260ம் உள்ளூர் பதிவெண் வாகனங்களுக்கு ரூ.85ம் மாதாந்திர கட்டணம் ரூ.5700ம், 3 அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.190ம் 24 மணி நேர கட்டணம் ரூ.285ம், உள்ளூர் பதிவெண் வாகனங்களுக்கு ரூ.95ம், மாதாந்திர கட்டணம் ரூ. 6285ம், கனரக வாகனம் 4 முதல் 6 அச்சு வாகனங்களுக்கு ஒருமுறை ரூ.270ம், 24 மணி நேரத்திற்கு ரூ.405ம், மாதாந்திர கட்டணம் ரூ.9035ம், உள்ளூர் பதிவெண் வாகனங்களுக்கு ரூ.135ம் வசூலிக்க வேண்டும். மிக அதிக அளவிலான 7 அச்சு  வாகனங்களுக்கு ஒரு முறை ரூ.330ம், 24 மணி நேரத்திற்கு ரூ.495, மாதாந்திர கட்டணம் ரூ.1095, உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.165ம் வசூல் செய்ய வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...