கரூர் பூ மார்க்கெட் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர், ஜூலை 16: பூ மார்க்கெட் சாலையில் குப்பை கூளங்களாக கிடக்கிறது.கரூர் ரயில்வே ஜங்ஷன் அருகே பூ மார்க்கெட் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை கொண்டு வந்து மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாலை வழியாக ரயில்வே ஜங்ஷனுக்கு செல்லும் பாதை உள்ளது. மார்க்கெட் அருகே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகள் உடனுக்குடன் அள்ளப்படுவதில்லை. இதனால் சாலையோரம் கொட்டப்பட்டு குவியலாக காணப்படுகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்...