×

தோகைமலை அருகே பரபரப்பு வாலிபருக்கு கத்திக்குத்து: கூலி தொழிலாளி கைது

தோகைமலை, ஜூலை 16: தோகைமலை அருகே பேரூர் உடையாப்பட்டி கடைவீதியில் வாலிபரை கத்தியால் குத்திய கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகம் நல்லூர் ஊராட்சி ஆர்த்தாம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல் மகன் மோகன்ராஜ்(27). இதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் சீனிவாசன்(36). இவர்கள் இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பேரூர் உடையாப்பட்டி கடைவீதிக்கு வந்த மோகன்ராஜ், தனது நண்பர்களான முத்துச்சாமி மற்றும் முருகேசன் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சீனிவாசன் எனது மனைவியிடம் தகாத உறவு வைத்து கொண்டு பழகி வருகிறாயா என்று மோகன்ராஜுவிடம் கேட்டு தகராறு செய்து உள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன்ராஜை சரமாரியாக குத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி உள்ளார். இதில் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மோகன்ராஜை மீட்டு அங்கு இருந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்தனர்.
தொழிலாளி தற்கொலை: கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி(36). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பைக்கில் மணல் திருட்டு: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கட்டிப்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் புகளூரைச் சேர்ந்த நசீர் என்பவர் பைக்கில் சாக்கு பையில் மணல் திருடிக் கொண்டு வரும் போது, வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் பிடிபட்டார்.இதே போல் கட்டிப்பாளையம் அருகே பாலா என்பவரும், நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில் அருகே தங்கவேல் என்பவரும் இதே போல் பைக்கில் சாக்கு பையில் வைத்து மணல் திருடிக் கொண்டு வரும் போது வேலாயுதம்பாளையம் போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டனர். மூன்று பேர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து மணல் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கஞ்சா வியாபாரி கைது: கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள ஐந்துரோடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...